மயிலம் அடுத்த பெரும்பாக்கத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரும்பாக்கம் கிராமம் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை மகாலிங்கேஸ்வரர் ஆலய அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர்கள் ஸ்ரீ மங்களாம்பிகை மற்றும் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரருக்கு பால் தயிர் சந்தனம் தேன் பன்னீர் மற்றும் பல்வேறு வகையான அபிஷேகப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ மங்களாம்பிகை மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் நகர் காட்சியளித்த ஸ்ரீ மங்களாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாரத்தை கற்பூரத்தை காண்பிக்கப்பட்டது. மேலும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் அன்னத்தால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ஸ்ரீ மகாலிங்கேஸ்வரருக்கு பஞ்சமுகத்திபராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்