in

ஐப்பசி பௌர்ணமி அன்னபூரணி நாயகனுக்கு அன்னத்தால் அபிஷேகம். திரளான பக்தா்கள் வழிபாடு

ஐப்பசி பௌர்ணமி அன்னபூரணி நாயகனுக்கு அன்னத்தால் அபிஷேகம். திரளான பக்தா்கள் வழிபாடு

சிவபெருமான் அபிஷேகப்பிரியர். ஐப்பசி மாத பௌர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பு வாய்ததாகும். சிவபெருமானே அன்னமாக மாறியிருக்கிறார் என்கிறது புராணங்கள். உலகில் வாழும் அனைத்து உயிர்களின் ஜீவநாடி அன்னம். ஒருவேளை உணவில்லாவிட்டாலும் உடல் சோர்வடையும். மூளை சரியாக வேலை செய்யாமல் தடுமாறும். அன்னம் தான் ஜீவன் என்கிறது சாஸ்திரம்.

உலகில் வாழும் மானிடர்களுக்கு மட்டுமல்ல இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது .இதனையெல்லாம் நினைவு கூர்ந்து துலா மாதமான ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும்; நடைபெறும் அன்னாபிஷேகத்தினை தரிசிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்குப் பஞ்சமில்லை என்பது பொியோா் வாக்கு.

அந்தவகையில் திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரை வண்ணாா்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகுஅருணாச்சலேஸ்வரர் அருள்தரும் உண்ணாமலை அம்பாள் திருக்கோவிலில் இன்று காலை அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு காலைசந்திகள் நடைபெற்றன. பகலில் மூலவருக்கு மாபொடி, மஞ்சள்.திரவியம், பால், தயிா், தேன், பஞ்சாமிருதம், இளநீா்,பன்னீா், வீபூதி மற்றும் சந்தணம் போன்ற 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்று காய் கனி அன்ன அலங்காரத்துடன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிறைவாக நட்சத்திர ஆரத்தி கும்ப ஆரத்தி மற்றும் பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அன்னாபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஐந்து சதவிகிதம் நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும், ஐந்து சதவிகிதம் பூமியின்கீழ் வாழும் ஜீவ ராசிகளுக்கும், ஐந்து சதவிகிதம் கால்நடைகளுக்கும், ஐந்து சதவிகிதம் பறவைகளுக்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மீதமுள்ள அன்னம் சாம்பார் மற்றும் காய்கறிகளுடன் கலந்து பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.

What do you think?

செங்கல்பட்டு மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் விழா

சிங்கம்புணரி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரமாண்டாமாக நடைபெற்ற அன்னாபிஷேகம் விழா