in

திருச்சியில் போதை பொருட்களை சமூகவலைத்தள செயலி நபர்களுக்கு DTDV கொரியர் மூலம் செய்த 8 பேர் கைது

திருச்சியில் போதை பொருட்களை சமூகவலைத்தள செயலி நபர்களுக்கு DTDV கொரியர் மூலம் செய்த 8 பேர் கைது – ஒருவர் தலைமறைவு – எஸ்.பி வருண்குமார் அதிரடி

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் வைத்திருப்பதாக மாவட்ட எஸ்பி.,யின் உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது.மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவின்படி, தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அடிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர் அப்போது கொள்ளிடம் பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அடிப்படை போலீசார் மணிகண்டன், சிஜு, பாலசுப்பிரமணியன், பிரவீன் குமார், வினோத் குமார், ராமசாமி, பார்த்திபராஜ் மற்றும் சுபீர் அகமது ஆகியோரை பிடித்து கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அவர்கள் அனைவரும் சமூக வலைதள செயலியை ஏற்படுத்தி, அதன் வாயிலாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக போதை மருந்துகளை கொரியர் மூலமாக விற்பனை செய்ததது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து, 21 கிராம் மெத்த பெட்டமின் என்ற போதைப் பொருள், சோடியம் குளோரைடு, பத்து ஊசிகள், இரண்டு பவுன் தங்கச் செயின், 5 மொபைல் கள், 5,145 ரூபாய் மற்றும் மாருதி சுசூகி கார் ஒன்றையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். மெத்த பெட்டமின் போதை பொருள் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய் என மாவட்ட எஸ்பி வருண்குமார் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போதைப்பொருள் Grindr சமூக வலைதள செயலில் உள்ள நபர்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டு DTDC கொரியர் நிறுவனம் மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

What do you think?

திருப்பதி பௌர்ணமி கருட சேவை

திருச்சி அருகே வாலிபருக்கு சரமாரி வெட்டு ; பழிக்குப்பழியாக நடந்த கொலையால் பரபரப்பு