in

ஒண்டி கருப்பு கோவிலில் கறி சமைத்து சாப்பிடும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

ஒண்டி கருப்பு கோவிலில் கறி சமைத்து சாப்பிடும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் மணிகண்டன் அருகே உள்ள அம்பேத்கார் நகர் எதிர்ப்புறம் உள்ள ஒண்டிக்கறுப்பு கோவிலில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சேர்ந்த அழகேசன் மகன் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது பெயர் ஜெகதீசன் (25)

இவர் கட்டட பணிகளுக்காக தீரன் மாநகர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது

இரவு நேரம் ஆகிவிட்டதால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அம்பேத்கார் நகர் எதிர்ப்புறம் உள்ள ஒண்டிக்கறுப்பு கோவிலில் சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு கோவிலேயே தங்குவதற்காக முடிவு செய்துள்ளனர்

சமைத்துக் கொண்டிருக்கும் போது கோவில் குதிரை சிலை அருகில் உள்ள போஸ்ட் மரத்தை தொடும் போது மின்சாரம் பயந்து தூக்கி வீசபட்டு உடன் இருந்தவர்கள் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு ஜெகதீசன் உயிரிழந்துள்ளார்

பின்னர் மணிகண்டம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் உடல் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

What do you think?

திருச்சி அருகே வாலிபருக்கு சரமாரி வெட்டு ; பழிக்குப்பழியாக நடந்த கொலையால் பரபரப்பு

திருச்சியில் கொலை செய்யப்பட்ட இளைஞர் கொலை வழக்கில் சிறுவர்கள் மூவர் உட்பட ஐந்து பேர் சரண் போலீசார் விசாரணை