in

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை,கடையம், கடையநல்லூர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்தது. அவ்வப்போது கனமழையும் பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலம் பிரதான அருவி,பழைய குற்றாலம்,ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது..

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

What do you think?

தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பவுர்ணமி தென் கைலாய வலம் 5000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் மானூரில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்