in

நெல்லை மாவட்டம் மானூரில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

நெல்லை மாவட்டம் மானூரில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் “ஸ்னோலின் இரத்ததான கழகம்” சார்பாக கடந்த சில ஆண்டுகளாக சில பொது நல சீவைகள்ன் செய்யபட்டு வருகிறது . அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நூறாவது பிறந்தநாள் விழா மற்றும் அரசு விழாவை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது

இதில் ஏராளமானோர் ஆர்வமாக கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர் இரத்த தானம் செய்தவர்களுக்கு பழங்கள் ,மற்றும் இரத்ததானம் செய்தவர்களுக்கு பழங்களும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது மேலும் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது

மானூர் ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி செல்வின் துரை முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வை மதிமுக மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி துவக்கி வைத்தார்

சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்பீடு ரத்ததான கழக பொறுப்பாளர் பாதுஷா மற்றும் மைதீன் திமுக காணார்பட்டி முன்னாள் தலைவர் ஜெயச்சந்திரன் பொறுப்பாளர் தொப்பி மைதீன் இளைஞர் அணி பொறுப்பாளர் மைக்கேல் மற்றும் சாமுவேல்
காங்கிரஸ் இயக்கத்தினுடைய வாக்கிய குமார் சிவன் பெருமாள் மாரியப்பன் அருள்ராஜ் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய திரு செல்லதுரை
இந்திய தேசிய லீக் கட்சி திரு காதர் பாஷா மற்றும் ஷேக் ஹயாத் கலந்து கொண்டனர். வியாபாரிகள் சங்க பொறுப்பாளர் திரு பாலசுப்ரமணியம் மற்றும்

ஸ்னோலின் ரத்ததான கழகத்தின் மூலம் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் திரு ராஜா வேத பாண்டியன் லாரன்ஸ் ரகுமான் ஹசரத் போன்றவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்

What do you think?

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதில் காலதாமதமாகி வருவதாக நெல்லையில் கூட்டுரவு வார விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்