in

திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுமார் ரூபாய்..ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மின் தூக்கி மற்றும் மருத்துவ உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ட்ரே உள்ளிட்ட நலத்திட்டங்களை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார்.

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 1.30 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும் கருவியினையும், பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணிக்கும் வகையில் ரூபாய் 36 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட மின்தூக்கி சேவையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கும் தட்டு முகம் மற்றும் வாய் பகுதி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பேஸ்ட்,பிரஸ் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 110 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும் மருத்துவமனை அருகிலேயே போலீஸ் பூத் ஒன்று கட்டவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய அமைச்சர் கே.என்.நேரு..

திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான புதிய தட்டுகள் வாங்கப்பட்டுள்ளது நோய் கிருமி கண்டறிவதற்கான புதிய ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது ஏற்கனவே ஏழு நாட்களில் முடிவு தெரிய வகையில் தான் ஆய்வகம் இருந்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் ஒரே நாளில் முடிவுகள் தெரிய வரும்.

அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்படும் முதலமைச்சர் அதை திறந்து வைப்பார்.

திருச்சிக்கு சித்த மருத்துவ கல்லூரி பல் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டுமா ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் நிதி நிலைமைக்கு ஏற்ப அது கொண்டு வரப்படும். மேலும் இந்த ஆண்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார். மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், மற்றும்
அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 16.11.2024

பெண் பணியாளர்களுக்காக பின்ங் சோன் (PINK ZONE) மையம் திறக்கப்பட்டுள்ளதாக நெல்லையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்