ஐப்பசி மாத பௌர்ணமி ஸ்ரீ ஆதிதவபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் விமர்சியாக நடைபெற்றது.
கொட்டும் மழையிலும் திருக்கல்யாணத்தை கண்டு களித்த ஆயிரம் கணக்கான பொதுமக்கள். வரிசையாக நின்று வடை பாயசத்துடன் விருந்தோம்பல் பரிமாறப்பட்டது.
கடலூர் மாவட்டம், குளிஞ்சாவடி அருகே புலியூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிதவபுரீஸ்வரர், ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ ஆதிதவபுரீஸ்வரர், ஸ்ரீ பெரியநாயகி அம்பாளுக்கும் இடையே திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
அப்பொழுது மழை குறிக்கெட்டதால் சற்று நேரம் பொதுமக்கள் கோயில் உள்ளே சென்றனர். மழை விட்டு உடன் மீண்டும் திருகல்யாணத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர். அதன் பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பூப்பந்து விளையாட்டு நடைபெற்றது.அதையடுத்து ஆயிரம் கணக்கான பொதுமக்களுக்கு வடை பாயசத்துடன் விருந்தோம்பல் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் நின்று கோவில் பிரசாதத்தை உணவருந்து சென்றனர்