நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம் நடைபெறுவது சந்தேகம்????
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணம், டிசம்பர் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டது, ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடி, இது 2027 க்குள் இவர்கள் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று ஜோதிடர் வேணு சுவாமி ஒரு கூற்றை வெளியிட்டபோது, பலர்….. ஜோதிடரை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதற்காக விமர்சித்தனர். தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் (TFJA) சுவாமியின் கருத்துக்கு எதிராக புகார் அளித்தது, போது பெரும் சர்சை வெடித்தால் அந்த பதிவு நீக்கப்பட்டது. நாக சைதன்யா தனது முதல் மனைவி சமந்தா ரூத் பிரபுவிடமிருந்து விவாகரத்து பெறுவார் என்று சுவாமி முன்பே கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கணிப்புகளுக்கு மத்தியில், நாகாவின் பெற்றோர்களான நாகார்ஜுனாவும் அமலா அக்கினேனியும் இரண்டாவது ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவர் அந்த கணிப்பை உறுதிப்படுத்தியதாகவும் தெரிகிறது. சோபிதாவை திருமணம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நாக சைதன்யாவை நாகார்ஜுனா அக்கினேனி குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.., 2022 ஆம் ஆண்டில் டேட்டிங் செய்யத் தொடங்கிய நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் படி திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமண தேதி நெருங்கி வருவதால், இந்த ஜோதிடரின் கணிப்புகள் அவர்களின் திருமண திட்டங்களை பாதிக்குமா என்று ரசிகர்களும் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் .