நெல்லை சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த வங்கி ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. உயிரிழந்த வங்கி ஊழியருக்கு அரசு விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் அஞ்சலி. நெல்லை மாவட்ட் கோட்டாட்சியர் மற்றும் மருத்துவர்கள் மலர் வளையம் வைத்து நேரில் அரசின் சார்பில் மரியாதை செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் இவரது மனைவி நிவேதா பிரியதர்ஷினி (32).இவர் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியராக பணி செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர் பணி செய்யும் வங்கிக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக அவரை மீட்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சைகள் அளித்த நிலையில் உறவினர்களின் விருப்பப்படி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் மீண்டும் 16ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு தொடர் சிகிச்சை அளித்த போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மூளை செயல்பாடு இருப்பதை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அந்த பரிசோதனை அறிக்கையில் அவர் மூளை சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது தொடர்ந்து அவரது உறவினர்களிடம் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தானாக முன்வந்து அளித்த ஒப்புதல் படி நிவேதா பிரியதர்ஷினியின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் தானமாக அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பல்வேறு மருத்துவமனை நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசின் உத்தரவுப்படி உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு செய்யப்படும் அரசு மரியாதையை அரசு மருத்துவ கல்லூரி சார்பில் மருத்துவர்களும் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல்லை மாவட்ட வருவாய் கோட்டாட்சியரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இன்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் உடல் உறுப்பு தானம் குறித்து தகவல் அறிந்த நிலையில் அரசு விழாவில் மூளை சாவடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த வங்கி ஊழியர் நிவேதா பிரியதர்ஷினிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலையும் செலுத்தினார்.