in

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் இந்திரனை நினைத்து பெண்கள் கோலாட்டம் நடனமாடி கொண்டாடும் இந்திர விழா

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் நாடு வளம் பெறவும், மக்கள் சுபிட்சமாக வாழவும், நல்ல மழை பெய்யவும் இந்திரனை நினைத்து பெண்கள் கோலாட்டம் நடனமாடி கொண்டாடும் இந்திர விழா கோலாகலமாக நடந்தது.

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை இந்திரன் இயக்கி வருவதாக புராணங்களில் கூறப்படுகிறது இயற்கை தன்னுடைய கடமையை சரிவர செய்வதற்கும், வருண பகவான் பூமியில் மழையை பொழிந்து பயிர்கள் செழித்து வளரவும் காரணமாக உள்ள இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திர விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தென்காசி மாவட்டம் மேலகரம் அக்ரஹாரம் தெருவில் சௌந்தர்யா மகளிர் மன்றம் சார்பில் நாட்டில் நல்ல மழை பெய்து வளம்பெற, பாரபத்துவயல் பகுதியில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் பசுவும் கன்றும் செய்தும், முளைப்பாாி இட்டும் பெண்கள் இந்திர பூஜையை ஆரம்பித்தனா்.

கடந்த 11 தினங்களாக பெண்கள், குழந்தைகள் ஆகியோா் பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் அடித்தும் ஸ்ரீ கிருஷ்ணபகவானை வழிபட்டனா். இந்திர விழா நிறைவாக இன்று சிறப்பு பூஜை செய்து கோலாட்டம் அடித்ததனா். நாட்டில் நல்ல மழை பொழிய வேண்டியும்,பயிா் செழிக்கவேண்டியும் விநாயகர் கோவில் முன்பு குழந்தைகள், பெண்கள் கோலாட்டம் அடித்து பாட்டுகள் பாடினா். பின்னா் ஊா்வலமாக சென்று பசுவையும், முளைப்பாியையும் நாளை கரைக்க உள்ளனர் வந்திருந்த பெண்கள், குழந்தைகளுக்கு தாம்பூலம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் இப்பகுதி பெண்கள் திரளானனோர் கலந்துகொண்டனர்..

What do you think?

கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் 1008 சங்காபிஷேக பெருவிழா

செப்பரை அழகிய கூத்தா் காா்த்திகை திருவாதிரை அபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது