in

பழனியில் சபரிமலை ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனியில் சபரிமலை ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் சீசன் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று வரும் பக்தர்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ததற்காக குவிந்துள்ளனர். படிப்பாதை, யானை பாதை ,வழியாக ஆண்கள் ,பெண்கள் என இரண்டு வரிசையாக பிரிக்கப்பட்டு செல்போன்கள் கொண்டு செல்லாதவாறு ஓலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும் , சோதனை செய்யப்பட்டு பக்தர்களை மலைக்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் மின் இழுவை ரயிலில் 10 ,ரூபாய் ,50 ருபாய், 60 கட்டண வரிசையில் சுமார் 2 மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை காத்திருந்தும் மலைக் கோவிலுக்கு சென்று, தரிசனத்திற்கு இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ,தங்கும் இடம் , கழிவறை வசதி, மாற்றுதிறனாளிக்கள் ,முதியோர்களுக்கு தனி வழி உள்ளிட்ட அடிப்படை வசிதிகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி தலைமையில் நிர்வாகம் அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

400 ஆண்டு பழமையான நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்

வேடசந்தூர் அருகே அழகாபுரி அணை திறப்பு விழாவில் தேனீக்கள் துரத்தியதால் அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள்