in

மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை வீதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை வீதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான ஆய்வு

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர்,தூய்மை பணிகள் குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தெற்கு சித்திரை வீதியில் தனது ஆய்வை தொடங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திறக்கப்பட்ட பொது கழிப்பறையின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து மேல கோபுர வீதியில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்து அதனை துரிதப்படுத்திட மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேல கோபுர வாசலில் கழிவு நீர் சாலையில் செல்லாத வகையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தினார்.

தொடர்ந்து கீழ சித்திரை வீதி மீனாட்சி பூங்காவில் முழுமையான ஆய்வு மேற்கொண்ட அவர் பூங்காவை முறையாக பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தவறாக செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் தொலை நோக்கு பார்வையின்றி கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 3 வருடங்களில் திருத்திக்கொண்டு வருகிறோம் .

அதன்படி மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவிலை சுற்றி உள்ள சித்திரை வீதிகளில் குடிநீர் ,கழிப்பறை ,பாதாளசாக்கடை,சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்த திட்டப்பணியை செயல்படுத்திட உள்ளோம்.

சித்திரை வீதிக்கென தனிக்கவனம் செலுத்தி அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அதனை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

மீனாட்சி அம்மன் திருக்கோவில் யானை பார்வதி நலனில் தனிக்கவனம் செலுத்தி வருவதோடு கண்புரை சிகிச்சைக்காக தொடர்ந்து நிபுணர்கள் குழு மூலம் யானை கண்காணிப்பில் உள்ளதோடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் வனத்துறையினருடன் ஆலோசித்து கூடுதல் வசதிகள்யானைக்கு செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது குறித்த விரிவான அமைப்பு ரீதியிலான அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி பார்க்கிங் சென்று அடைய வழிமுறைகள் இன்றி அமைக்கப்பட்டதை மாற்றம் செய்து வாகனங்கள் அங்கு எளிதில் சென்று அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஐ டி துறையை பொறுத்தமட்டில் அனைத்து தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவான முறையில் அதில் நிறுவனங்களை இடம்பெற செய்து வேலை வாய்ப்பினை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உரிய வழிகாட்டுதலில் உருவாக்கி உள்ளோம்.கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருந்த சோழிங்கநல்லூர்,கோவை ஐ டி பூங்காக்களை முழுமையாக நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

What do you think?

சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்றும் ஜார்க்கண்ட் மகாராஷ்ட்ரா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

ஒருத்தர் மட்டும் ஆள்வதற்கு பிறக்கவில்லை, கொள்கை கூட்டணி அதிகார கூட்டணி என்று சொல்வார்கள், அப்படி என்றால் அதிகாரத்தை தலித்திடம் கொடுங்கள்