குறிஞ்சிப்பாடியிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி
புவனகிரி பேருந்து நிலையத்தில் பயணிகளை பத்திரமாக இறக்கவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சென்ற ஓட்டுனர்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு பேருந்து ஓட்டி வந்த ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரம் நோக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து தடம் எண் 10 B ஓட்டிச் சென்ற ஓட்டுனர் சிவக்குமார் என்பவருக்கு புவனகிரி பங்களா பேருந்து நிறுத்தம் அருகே திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது இந்நிலையில் புவனகிரி பேருந்து நிலையம் வரை பயணிகளுடன் வலியோடு பேருந்தை இயக்கி வந்து புவனகிரி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுனர் சிவகுமாரை மருத்துவ சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு புவனகிரி காவல் துறையினரால் அனுப்பி வைத்தனர்