in

திருமங்கலக்குடி மில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம்

திருமங்கலக்குடி மில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம்

திருமங்கலக்குடி மில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்திட முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டது. மகா கும்பாபிஷேக விழா மூன்று கால யாக சாலை பூஜை பூர்ணாகுதியை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோயில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பத்மநாப ஆச்சாரியார் செய்வித்தார். இதில் அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, ஆய்வாளர் அருணா, உபயதாரர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இரவு ஆஞ்சநேயர் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் செல்வகுமார் மற்றும் திருமங்கலக்குடி கிராமவாசிகள் செய்திருந்தனர்.

What do you think?

எதிர்க்கட்சி சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இல்லை – நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேட்டி

திருவிடைமருதூரில் நடை பயிற்சி சென்ற பெண்ணை கீழே தள்ளி 9 பவுன் தாலி செயின்கள் பறிப்பு