in

திருவிடைமருதூரில் நடை பயிற்சி சென்ற பெண்ணை கீழே தள்ளி 9 பவுன் தாலி செயின்கள் பறிப்பு

திருவிடைமருதூரில் நடை பயிற்சி சென்ற பெண்ணை கீழே தள்ளி 9 பவுன் தாலி செயின்கள் பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மருதவாணன் என்பவரது மனைவி மணிமேகலை வயது 62 இவர் தினமும் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் உறவுக்கார பெண் ஒருவருடன் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார் திருவிடைமருதூர் மேலவீதி அருகே காலை ஐந்து முப்பது மணி அளவில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாலி செயினை பறிக்க முயன்ற போது மணிமேகலை கீழே விழுந்துள்ளார். அவர்கள் சுதாரிப்பதற்குள் முன்னே சென்ற இருவரும் திரும்ப வந்து மணிமேகலையின் கழுத்தில் கிடந்த இரண்டு செயின்களை அறுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். தாலி செயின் உள்ளிட்ட இரண்டு செயின்களின் மொத்த மதிப்பு 9 பவுன். கீழே விழுந்த மணிமேகலையின் தலையிலும் கழுத்தில் சிராய்ப்பும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மணிமேகலை திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். தகவல் அறிந்து வந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜி மற்றும் போலீசார் மணிமேகலை இடம் விசாரணை நடத்திவிட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவிகள் மூலமும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

திருமங்கலக்குடி மில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெய வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம்

மழலை மொழியில் மழைக்கால விழிப்புணர்வு