கிரிவலம் வரும் ஆந்திரா தெலுங்கானா பக்தர்களின் பேருந்துகளை குறிவைத்து திருடி வந்த வடமாநில இளைஞன் கைது …
வட மாநில இளைஞரின் கை கால்களை கட்டி தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக வேலூர் சாலையில் உள்ள ஈசானிய மைதானத்தில் தினந்தோறும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பேருந்துகள், கார் உள்ளிட்டவைகள் நிறுத்தப்படும்.
பேருந்து நிறுத்தப்பட்ட பின் பக்தர்கள் அனைவரும் அங்கிருந்து திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் சூழலில் பக்தர்களின் உடைமைகள் பணம் உள்ளிட்டவைகள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் ஆந்திராவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஈசானிய மைதானத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வடமாநில இளைஞர்கள் தொடர்ந்து இரண்டு பேருந்துகளில் தங்களது கைவரிசையை காட்டி விட்டு 3 வது பேருந்துக்குள் மர்ம நபர்கள் நுழைவதை அறிந்த பேருந்து ஓட்டுநர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்த போது வட மாநில இளைஞர்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர்.
அப்போது அக்கம் பக்கத்தினர் வட மாநில இளைஞர்களை பிடிக்க முயற்சித்த பொழுது ஒருவன் பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டான்.
அவனை பிடித்து சரமாரியாக தாக்கிய நிலையில் அவனது கை கால் உள்ளிட்டவைகளை நைலான் கயிற்றால் கட்டி பொதுமக்கள் தாக்கினர்.
இது குறித்து கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வட மாநில திருடனை பொதுமக்களிடமிருந்து மீட்டு கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பிறகு போலீசார் பேருந்துகளில் திருடிக் கொண்டு தப்பித்த மேலும் இரண்டு வட மாநில இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிகழ்வு திருவண்ணாமலைகள் பரபரப்பை ஏற்படுத்தியது.