செங்கம் அருகே அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் விழுவது தொடர் கதையாகும் அவலம்
ஊருக்கு ஆபத்தான நிலையில் கல்வி பயிலும் மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுக்கா தென் முடியனுர் ஊராட்சியில் கடந்த 1999-2000 ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகின்றது
தற்போது இந்த பள்ளியில் 124 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர் இதில் ஐந்தாம் வகுப்பு கட்டிடம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கட்டிடத்தை அகற்ற 2021-2022 கல்வி ஆண்டில் இடிக்க உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதனை இடிக்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பழுது பார்க்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் வைத்திருந்ததால் நேற்று திடீரென வகுப்பறையின் மேல் கூரையின் சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்துள்ளது
மாணவர்கள் வகுப்பறையின் மேல் கூரையின் சிமெண்ட் பூச்சு இடியும் தருவாயில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக மாணவ மாணவிகள் அதன் அருகில் அமராமல் சிறிது தூரம் தள்ளி அமர்ந்திருந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது
இதேபோன்று உயர்நிலை பள்ளியின் ஒன்பதாம் வகுப்பறியும் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயின்று வருவதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்ற மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.