in

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கோரி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக பெண் உள்ளிட்ட இரண்டு பேர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கோரி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக பெண் உள்ளிட்ட இரண்டு பேர் கைது.

திருச்சி மாநகர் கே கே நகரில் அக்ஷயா அசோசியேட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏஜென்ட்கள் மூலம் விளம்பரம் செய்து 30க்கும் மேற்பட்டோறிடம் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாகியும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை, எனவும், பணத்தையும் திருப்பி தரவில்லை என்பதால்
திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி விட்டதாக அக்ஷயா அசோசியேட் நிறுவனத்தின் நிறுவனர் பத்மாவதி, கணேசன் ஆகியோர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தனர். பணத்தை கொடுத்து விட்டு இரண்டு வருடங்களாக பணத்தை திருப்பித் தர வேண்டும் என புகார் அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களில் செயல்பட்ட ஏஜென்ட்கள் மீதும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஒவ்வொரு ஏஜென்ட்கள் மூலமாக பணத்தைப் பெற்று பத்மாவதி இடம் கொடுத்துள்ளனர். ஒவ்வொருவரும் 7 லட்சம், 8 லட்சம், 10 லட்சம் என பணம் கொடுத்துள்ளனர். சுமார் இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது தொடர்ந்து பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர்.

இதுகுறித்து ஏஜென்ட்கள் கூறும் போது தாங்கள் கேட்டாலும் எந்தவித பதிலும் சரியாக கொடுக்காமல் உள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கின்றனர் என ஏஜெண்டுகளும் தெரிவிக்கின்றனர். திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு ஏஜென்டாக பாரதி செயல் பட்டுள்ளார்.

இதுகுறித்து ஒரியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அக்ஷயா அசோசியேட் நிறுவனத்தை நடத்திய பத்மாவதி மற்றும் கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறும் போது…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவரிடம் பத்மாவதி மற்றும் கணேசன் ஏமாற்றியுள்ளனர் பலரிடம் கோடி கணக்கில் பணத்தை வாங்கி பல இடங்களில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு இடமும் 6 லட்சம், 7 லட்சம், 10 லட்சம் என பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை இதுகுறித்து ஏஜென்ட்களிடம் கேட்டபோது பத்மாவதி மற்றும் கணேசன் சரியான பதில் தரவில்லை என எங்களுடன் சேர்ந்து அவர்களும் புகார் அளித்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் எங்களை அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். உடனடியாக எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் மேலும் அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் முடக்க வேண்டும் இதேபோல 80க்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் ஏராளம் பல கோடிக்கு மேல் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். நாங்கள் முதற்கட்டமாக முப்பதுக்கு மேற்பட்டோர் புகார் அளித்துள்ளோம் எனகூறினார்.

What do you think?

திருச்சி காவிரி கரையோரத்தில் 2வது ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிப்பு

திருச்சியில் சாலையில் தவித்த தடை செய்யப்பட்ட ரக நாய்