திருச்சியில் சாலையில் தவித்த தடை செய்யப்பட்ட ரக நாய் – நாய்களை பராமரிப்பவர் எடுத்துச் சென்ற சம்பவம்
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள உய்யயக்கொண்டான் வாய்க்காலை ஒட்டி வயதான நாய் உடல்நிலை மோசமான நிலையில் தண்ணீரில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தது.
அப்பகுதியில் சென்ற இளைஞர் ஒருவர் இந்த நாயை எடுத்து கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் பார்த்த போது தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாய். இதனை வளர்த்த எஜமான் நாய்க்கு உடல்நிலை மோசமானதால் பராமரிக்க முடியாமல் இப்படி கொண்டு வந்து விட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்தார் அந்த இளைஞர்.
வளர்த்தவர் அதனை பராமரிக்க முடியவில்லை என்றால் பராமரிப்பாளர்களிடம் கொடுத்து விடுவது தான் நல்ல செயல் என்றார்.
நாய்களை பராமரிக்கும் ஓய்வு பெற்ற காவலர் கண்ணையாவுக்கு இந்த நாயை எடுத்து சென்றுள்ளார். தடை செய்யப்பட்ட ரக நாய்களை வளர்ப்பவர்கள் முறையாக அரசுக்கு அறிவித்து உடனே ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் இது போல் சாலையில் விட்டு செல்வது தவறு என பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.