கார்த்திகை மாத மகா தேவ தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு விருதுநகர் 800 ஆண்டுகள் மிகவும் பழமையான ஶ்ரீமீனாட்சி உடனுறை சொக்கநாதர் திருக்கோவில் ஸ்ரீ பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு :-
சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தன்று தோன்றியதாக புராணம் கூறுகின்றது. சனியின் குருவாக போற்றப்படும் பைரவரை துதித்தால் ஏழரை சனி, அஷ்டம சனி ஆகிய பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என ஜோதிடம் கூறுகின்றது. இன்று கார்த்திகை மாத தேய்பிறை மகாதேவ அஷ்டமியான பைரவாஷ்டமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் விருதுநகர் மேலரத வீதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் மிகவும் பழமையான புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ சொக்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பைரவர் ஸ்வாமிக்கு ஒவ்வொரு அஷ்டமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பைரவர் ஜெயந்தி திருநாளான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினமான இன்று பைரவருக்கு திரவியம்,மஞ்சள்,அரிசிமாவு,பால்,தயிர்,தேன்,பஞ்சாமிர்தம்,பன்னீர், இளநீர்,சந்தனம் விபூதி, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பைரவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததுடன், தேங்காய், பூசணிக்காய்களில் தீபங்களை ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.