in

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது மாநில தலைவர் பச்சையப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மு தனபாலன் சிறப்பா அழைப்பாளராக பங்கேற்றார்.

பல்வேறு மாவட்ட மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இருந்து கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேர்வு நிலை சிறப்பு நிலை முடித்த ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடை களைய வேண்டும், தலைமைச் செயலக ஓட்டுனர்களுக்கு வழங்கப்படுவது போல மற்ற அரசுத்துறை ஓட்டுநர்களுக்கும் அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி மாறுதலில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலம் வரை ஊதியத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் திமுக அளித்தபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What do you think?

குத்தாலத்தில் கார்த்திகை இரண்டாவது ஞாயிறை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம்

பழனியில் நக்கீரர் தமிழ்சங்கம் சார்பில் நக்கீரர் தமிழ் மாநாடு நடைபெற்றது