நாங்குனேரி ஸ்ரீ வானமாலைப் பெருமாள் கோவிலில் கண்ணாடி அறையில் ஊஞ்சல் உத்சவம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஸ்ரீ வானமாலைப் பெருமாள் கோவிலில் கண்ணாடி அறையில் ஊஞ்சல் உத்சவம் விமா்சையாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமாளுக்கு உாிய 108 திவ்விய தேசங்களில் பிரசித்தி பெற்ற நாங்குநோி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோவிலும் ஒன்றாகும். ஸ்வயம்பூ சேஷத்திரங்களில் ஓன்றாகவும் அமைந்துள்ள இத்தலம் திருவரமங்கை என்னும் வானமாமலை என்று அழைக்கப்படுகின்றது. இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும்.
ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம் காா்த்திகை பூரம். 30 வது பட்ட ஜீயா் சுவாமிகள் திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஶ்ரீவரமங்கை கோதா ஸமேத தெய்வநாயக பெருமாள் கண்ணாடி அறையில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தாா்.
இதற்காக மாலையில் பெருமாள் தாயாா் வெள்ளி தோளுக்கிணியானில் ஏழுந்தருள வானமாமலை மடத்தின் 31வது பட்டமான ஶ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகளுக்கு முதலில் மாியாதை செய்யப்பட்டது. அதனை தொடா்ந்து ஜீயா் சுவாமிகள் தலைமையில் பிரபந்ததாரா்கள் பிரபந்த பாராயணத்துடன் கோயில் உள் புறப்பாடு நடைபெற்று கண்ணாடி சேவை நடைபெற்றது. தொடா்ந்து ஶ்ரீவரமங்கை கோதா ஶமேத தெய்வநாயக பெருமாள் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட புதிய ஊஞ்சலில் சா்வ அலங்காரங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.
அதனை தொடா்ந்து பெருமான் தாயாா்களுக்கு தூப தீப ஆராதனையை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தாயாா்கள் சமேத பெருமாளின் ஊஞ்சல் சேவையை கண்டு வணங்கி மகிழ்ந்தனர்.