ஏரியில் மீன்பிடித்த மீனவரின் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் ஹசனாபாத் அருகில் இருக்கும் எல்லம்மா ஏரியில் மீனவர்கள் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர் வீசிய வலையில் வழக்கத்திற்கு மாறாக கனமான ஏதோ ஒன்று சிக்கியது.
எனவே பெரிய மீன் அல்லது முதலை சிக்கி இருக்கலாம் என்று கருதி அந்த மீனவர் வலையை இழுத்தார்.
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்தது.
மலைப்பாம்புடன் படகை கரைக்கு செலுத்தி அந்த மீனவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த வனத்துறையினர் வளையல் சிக்கிய மலைப்பாம்பை மீட்டு எடுத்து சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.
அந்த ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மலைப்பாம்பு தண்ணிக்குள் என்ன செய்து கொண்டிருக்கும்? எதற்காக வந்திருக்கும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.