in

புது இராமநாதபுரம் ரோட்டில் உள்ள பிரதான பனையூர் கால்வாயில் விழுந்த பசு மாடு

புது இராமநாதபுரம் ரோட்டில் உள்ள பிரதான பனையூர் கால்வாயில் விழுந்த பசு மாடு – போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

 

மதுரை புதுராமநாதபுரம் சாலையில் உள்ள பனையூர் பிரதான கால்வாயில் பசுமாடு ஒன்று எதிர்பாராவிதமாக தவறி விழுந்து விட்டது.

கால்வாயில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த மேல அனுப்பானடி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் கணேஷ் தலைமையில் தீனைப்பு வீரர்கள் கால்வாயில் விழுந்த பசு மாட்டை கயிறு கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

மாடுகள் சாலையில் திரிவதால் வாகனங்களுக்கு மிரண்டு கால்வாயில் விழுவது தொடர்கதை ஆகியுள்ளது என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் மதுரை மாநகரில் சாலைகளில் தெரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து சாலையில் திரியும் மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

What do you think?

ஏரியில் மீன்பிடித்த மீனவரின் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேக பூஜை