in

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம்

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் மழையால் நீரில் மூழ்கி அழிந்து போன நெல் விவசாயத்திற்கு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் முத்துராமன், தாலுகா தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடந்த செப்டம்பர் கடைசி அக்டோபர் முதல் வாரத்தில் பெய்த தொடர் மழையால்  மங்களக்குடி புல்லூர், திருவாடானை உள்ளட்டத்திற் உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மழை நீரால் பயிர்கள் முளைத்து 30 நாட்கள் ஆன நிலையில் தண்ணீரில் மூழ்கி அழுகி அழிந்துள்ளது.

இதற்கு பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கு ரூபாய் 15,000 வெள்ள நிவாரணம் வழங்கிட வேண்டி தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கும் விதமாக திருவாடனை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அமர்நாத்திடம் மனு கொடுத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

What do you think?

விவசாயிகளுக்கு தங்க மோதிரம் கொடுத்து விருந்து வைத்த நடிகர் விஜய்

நாமக்கல் – காவிரியில் ஐப்பசுவாமிக்கு 3-ம் ஆண்டு ஆராட்டு செய்த பக்தர்கள்