in

நாமக்கல் – காவிரியில் ஐப்பசுவாமிக்கு 3-ம் ஆண்டு ஆராட்டு செய்த பக்தர்கள்

நாமக்கல் – காவிரியில் ஐப்பசுவாமிக்கு 3-ம் ஆண்டு ஆராட்டு செய்த பக்தர்கள்

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இன்று மோகனூர் ஸ்ரீஇரட்டை பிள்ளையார், ஸ்ரீ சபரி தர்ம சாஸ்தா சேவா அறக்கட்டளை மற்றும் ஐய்யப்பன் பக்தர்கள் சார்பாக 3-ம் ஆண்டுஆராட்டு விழா இன்று நடைபெற்றது.

அப்போது காவிரியாற்றின் கரையில்ஐயப்ப சுவாமிக்கு இன்று ஆராட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது அப்போது ஐப்பசுவாமிக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் நெய் விபூதி , சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் நடுகாவிரியாற்றில் ஐய்யப்ப சுவாமி – பக்தர்கள் தோளில் சுமந்தவாரு வந்து இறங்கிகாவிரியாற்றில் சாமியே சரணம் ஐய்யப்பா கோசம் முழங்க தீர்த்தவாரி, ஆராட்டு நடைபெற்றது.

பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோபுர தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.இதில் ஏராளமான ஐய்யப்பா பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம்

பத்தாம் வகுப்பு மாணவனை அடித்ததில் கை எலும்பு முறிவு – தலைமை ஆசிரியர் கைது