in

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் மிதமான மழை

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் மிதமான மழை

 

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வருகிறது, பள்ளி கல்லூரிகளும் புதுச்சேரியில் வழக்கம்போல் இயங்கி வருகிறது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக புதுச்சேரியில் வானம் மேகமூட்டவுடன் காணப்பட்டு வந்தது நேற்று இரவு சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக கடற்கரை சாலை, விமான நிலையம், உப்பளம், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, உள்ளிட்ட நகர பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோன்று கிராமப்புறங்களான பாகூர், திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் புதுச்சேரியில் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை தேங்காய் திட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கட்டுமரம், வலை, விசைப்படகு ஆகியவற்றை உரிமையாளர்கள் அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்து கொள்ளுமாறும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மீன்வளத்துறையின் அவசர கால கட்டுப்பாட்டு அறை 24×7 முழு நேரமும் இயங்கி வருகிறது. எனவே மீனவர்கள் அவசர உதவிக்கு 0413-2353042 என்ற எண்ணிலோ அல்லது அவசர கால செயல் மையத்தின் Toll free No. 1070 மற்றும் 1977 தொடர்பு கொள்ளலாம் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

What do you think?

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஆரஞ்ச் அலர்ட் 

நாமக்கல் – மோகனூரில் – யானை வாகனத்தில் ஐப்பசுவாமி திருவீதி உலா