in

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தரங்கம்பாடி பகுதியில் பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தரங்கம்பாடி பகுதியில் பலத்த மழை

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தரங்கம்பாடி பகுதியில் பலத்த மழை, இரண்டு மணி நேரத்தில் நான்கு சென்டிமீட்டர் மழை பதிவு.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுகளை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு துவங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது தரங்கம்பாடி பகுதியில் பலத்த மழை பதிவாகி வருகிறது. காலை ஆறு முப்பது மணிக்கு தரங்கம்பாடி பகுதியில் 12 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், இரண்டு மணி நேரத்தில் 42 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோயில் மணல்மேடு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கொள்ளிடம் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

What do you think?

திருமெய்ஞானத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கிரிவலம் வரும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை