in Thiruvarur
அரசு மதுபான கடை ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை
அரசு மதுபான கடை ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை
அரசு மதுபான கடை ஊழியருக்கு ஓராண்டு சிறை காசோலை வழக்கில் திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.
நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுக்கா மூலக்கரையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (வயது 34) இவர் எல்ஐசி முகவராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் அன்டற்க்காடு பகுதியில் சேர்ந்த காளியப்பன் மகன் மணவழகன் (வயது 40) இவர் அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் குடும்பத் தேவைக்காக விக்னேஷிடம் ரூபாய் 4 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு வங்கி காசோலை வழங்கி இருக்கிறார்.
வங்கியில் காசோலை விக்னேஷ் செலுத்திய போது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வரவே திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் விக்னேஷ் வழக்கை விசாரித்த திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்ற நீதிபதி மாணிக்கம்.
மணவழகன் குற்றவாளி எனவும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் அவர் வாங்கிய நான்கு லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு மாதத்திற்குள் திருப்பி தர வேண்டும் இல்லையென்றால் கூடுதலாக ஆறு மாத சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார்.
அரசு மதுபான கடை ஊழியருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழங்கி இருப்பது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.