ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை சீண்டிய இசைவாணியை கைது செய்ய வேண்டும்
பிக்பாஸ் பிரபல இசைவாணி, ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஒரு பாடலை பாடியதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பாடகி இசைவாணி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று கானா பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவர் சில தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கானா பாடல்களைப் பாடியிருந்தாலும், இயக்குனர் பா.பஞ்சித்தின் காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவில் பல்வேறு பாடல்களைப் பாடி இருக்கிறார்.
இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவர் பாடிய பாடல் இசைவாணியை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.. ஐயப்பன் சன்னதிக்கு பெண்கள் செல்வதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
இவர் பாடலில் இளம் பெண்களும் கோவிலுக்கு வந்தால் என்ன தவறு என்று கேட்பது போல் பாடியுள்ளார்..
எனவே, ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அவரது பாடல் இருப்பதாக பிரச்சனை வெடித்துள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் நடத்தும் மார்கழியில் மச்சிசை என்ற இசை நிகழ்ச்சியில் இசை வாணி இப்படி ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
இந்தப் பாடலில், “மன்னிக்கவும் ஐயப்பா… நா உள்ள வந்தா என்னப்பா… நான் தாடிகாரன் பேபி.. இப்ப காலம் மாறி போச்சு! நீ தள்ளி வச்ச தீட்டா… நான் முன்னேருவேன் மாசா!” என்று பாடியுள்ளார்..
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணி பாடிய பாடல் மீண்டும் இணையத்தில் வைரலாகி ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாக இசைவாணி.. க்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டது.
அவருக்கு ஆதரவாக இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட போஸ்ட்…டில், இசைவாணி மதம் சார்ந்த பாடலை பாடவில்லை பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாடினார்., பிற மதங்களோடு சம்பந்தப்படுத்தி பிரச்சினையாகி இசைவாணியை இணையத்தில் வசைபாடி வருவது தவறு.. ஜனநாயகத்தை நம்பும் சக்திகள் அனைவரும் இசைவாணியோடு நிற்க வேண்டும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று பா ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.