மதுரை வைகையாற்றில் பிளாஸ்சாக்கில் சிக்கிதவித்த பாம்புதாரா பறவையை மீட்டு உயிர்காத்திட்ட விஜயகாந்த் – கையில் ரத்தம் சொட்ட சொட்ட உயிரை காப்பாற்றி பறவையை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மதுரை மாநகர் வைகையாற்றில் ஏராளமான வித விதமான பறவைகள் வந்து தங்கிசெல்கிறது. வைகையாற்றில் உள்ள மீன்களை உண்டு பசியாறிவருகிறது.
இந்நிலையில் மதுரை வைகையாற்றில் நின்று கொண்டிருந்த பாம்புதாரா பறவை ஒன்று ஆற்றில் கிடந்த மீனை சாப்பிட்டுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக் சாக்கு ஒன்றில் அலகு மாட்டிக்கொண்டது. இதனால் நீண்ட நேரம் உயிருக்கு போராடி மயங்கியது.
இதனையடுத்து பறவை துடிப்பதை பார்த்த வைகையாற்று ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விஜயகாந்த் என்ற நபர் தண்ணீருக்குள் குதித்துசென்று உயிருக்கு போராடிய பாம்புதாரா பறவை மீட்டார்.
அப்போது பறவையின் அலகில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் சாக்கை அகற்ற முற்பட்டபோது அலகில் இருந்து பற்கள் கையை அறுத்ததில் கையில் காயமடைந்து ரத்தம் சொட்டியது.
இதனையடுத்து கையில் காயத்துடன் ரத்தம் சொட்டிய நிலையிலும் பாம்புதாரா பறவையை காப்பாற்றி அதனை பறக்கவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் விஜயகாந்தின் செயலை பார்த்து பெயருக்கு ஏற்ப நடந்துகொண்டார் என பாராட்டு தெரிவித்தனர்.