in

புதுச்சேரியில் மாதத்திற்கு 50 பார்கள் என இதுவரை 600 ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் மாதத்திற்கு 50 பார்கள் என இதுவரை 600 ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டுள்ளது

மக்களைப் பற்றி சிந்திக்காத மக்கள் விரோத அரசாக என். ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு உள்ளது புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா குற்றச்சாட்டு

தமிழ்நாடு துணை முதல்வர், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47–வது பிறந்த நாளை முன்னிட்டு, காட்டேரிகுப்பம் கிராமத்தில் புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக மாநில அமைப்பாளர் சிவா நூலகத்தை திறந்து வைத்தார், தொடர்ந்து பல்நோக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய திமுக மாநில அமைப்பாளர் சிவா..

கடந்த மூன்று ஆண்டுகளில் புதுச்சேரியின் பொருளாதாரம் பின்தங்கி உள்ளது இதனால் வளர்ச்சியும் பின்தங்கி உள்ளது. புதுச்சேரியில் மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரு மோசமான, மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மாடுகள் கூட தரமான மாடுகளை இந்த அரசால் வழங்க முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ரேஷன் கடைகளில் தொடர்ந்து அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழில்துறை மிகவும் நலிவடைந்துள்ளது மாதத்துக்கு ஐம்பது 50 பார் என இதுவரை 600 ரெஸ்டோபர்கள் திறக்கப்பட்டுள்ளது. மதுபான பார்களை தவிர புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டதாக தெரியவில்லை.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை,மக்களுக்கு தேவையான வசதிகளை செய்யக்கூடிய அரசாக இது இருக்க வேண்டும். புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் மகளிர் இலவச பேருந்து இயக்கப்படுகிறது ஆனால் புதுச்சேரியில் பேருந்தே சரியாக இயக்கவில்லை, பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் உதவி தொகை இதுவரை சரியாக சென்று சேரவில்லை, இலவச மனை பட்டா வழங்கப்படவில்லை. வருங்காலத்தில் இது போன்ற அவலங்களை நீக்கி புதுச்சேரியில் மக்கள் பிரச்சினைகளை கேட்டு அவர்களுடைய குறைகளை தீர்க்கக்கூடிய நல்ல ஆட்சி அமையும் என்று சிவா பேசினார்.

What do you think?

செம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பலி போலீஸ் விசாரணை

கடல் அரிப்பில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ள மீனவ கிராமங்கள்..