in

தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60% மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுக குற்றச்சாட்டு

தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60% மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுக குற்றச்சாட்டு

 

புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60% மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்க கூட இடமில்லை- அதிமுக குற்றச்சாட்டு..

மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு சட்டசபை கட்ட 600 கோடி ரூபாய் கேட்பதா என அதிமுக கண்டனம்

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்…

ஆளுநருக்கும் முதல்வருக்கும் அதிகார பிரச்சனைகள் வரும் போது மட்டுமே முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து பற்றி பேசுகிறார் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுகிறார் ஆனால் மற்ற நேரங்களில் மாநில அந்தஸ்து பற்றி அவர் நினைப்பது இல்லை.

மத்திய அரசு அமைத்துள்ள 16 வது நிதி கமிஷனில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் நிதி பகிர்வு சம்பந்தமாக விளக்கங்களையும் கருத்துகளையும் எடுத்து வைக்கின்றனர் .

ஆனால் புதுச்சேரி நிதி கமிஷனில் இணைக்கப்படாததால் புதுச்சேரி மாநில நிதி சம்பந்தமாக மத்திய அரசுக்கு தெரியப்படுத்த முடியவில்லை என்றார். இதற்காக புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் உள்ள துறைமுகம் கலால் துறை மூலமாக மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரியாக செலுத்தப்படுகிறது, ஆனால் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட புதுச்சேரிக்கு மத்திய அரசு செலவு செய்யவில்லை. அப்படி நிதி கமிஷனில் புதுச்சேரியை இணைத்தால் 1600 கோடி ரூபாய் நிதி பகிர்வு புதுச்சேரிக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருவதால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது 60% மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே சுகாதாரத் துறையில் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்க கூட இடம் இல்லாமல் இருக்கிறது ஆனால் சட்டசபை கட்ட 600 கோடி ரூபாய் இந்த அரசாங்கம் கேட்கிறது மக்கள் மீது கொஞ்சம் கூட இவர்களுக்கு அக்கறை இல்லை என்று தெரிவித்த அவர் உடனடியாக மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

What do you think?

எந்தெந்த மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27.11.2024 ) விடுமுறை?

புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல். 10 அடிக்கு மேல் கடல் அலைகள்