in

திருத்துறைப்பூண்டிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் குழுவினர் வருகை

திருத்துறைப்பூண்டிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் குழுவினர் வருகை

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் மாலை கனமழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியாக கனமழை பெய்வதாலும் மழையின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி நேற்று இரவு சென்னை ஆவடியில் இருந்து அவில்தார் அழகியநம்பி தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் (TNDRF ) 25 பேர் அரிவாள். சுத்தியல். மரம் அறுக்கும் இயந்திரம், லைஃப் ஜாக்கெட், ஜெனரேட்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் உபகரணங்களுடன் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

தற்போது பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நுழைவு வாயில் முன்பு உள்ள மங்களநாயகி திருமண மண்டபத்தில் தங்கி உள்ளனர்.

What do you think?

திருவாரூரில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதயநிதி பிறந்தநாள் ஒட்டி புதுச்சேரியில் இன்று ஒரு நாள் இலவச பேருந்து பயணம்