in

தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல்

தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல்

 

புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள 121 நிவாரண முகாம்கள் அமைப்பு, தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது, -மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல்

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை

புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று வானில் ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. மழையை ஒட்டி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன் வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிராமப்புறங்களான நல்லவாடு, பணித்திட்டு பிள்ளையார்குப்பம், புது குப்பம் பூரணங்குப்பம், கொருக்குமேடு, உள்ளிட்ட கிராமங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை இன்று சபாநாயகர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நல்லவாடு பகுதியில் உள்ள மீனவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க தற்காலிக இடமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம்…

மீனவர்கள் கடற்கரை பகுதியில் தூண்டில் முன் வளைவு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளார்கள் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் 121 நிவாரண முகாம் தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தானாக முன்வந்து நிவாரண முகாமில் தங்கிக் கொள்ளலாம், அவர்களுக்கு இலவசமாக உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன் மீனவப் பகுதிகளில் படகுகள் சேதம் அடையாமல் இருக்க தற்காலிக இடம் தயார்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது, முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சேர்ப்பதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது, தற்போது தேவையான அளவிற்கு நிவாரண முகாம் உள்ளது தேவைப்படும் பட்சத்தில் நிவாரண முகாம் அதிகரிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி துறைமுகத்தில் 3-எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கை

புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது – முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி