in

சீர்காழி அருகே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் விரிசல்

சீர்காழி அருகே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் விரிசல்

 

சீர்காழி அருகே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பக்கவாட்டு சுவர்களின் வழியே அருவி போல் கொட்டும் தண்ணீர், பெரிய விபத்து ஏற்படும் முன் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை 45 ஏ தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும்பணி நடைபெற்று வருகின்றது. இந்த பாதையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் துவங்கி காரைக்கால் மாவட்டம் சந்திரபாடி வரையிலான பகுதி மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே சூரைக்காடு என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலையின் உயர்மட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது அது மட்டுமன்றி பாலத்தின் மேல் பகுதியில் பெய்யும் மழை நீரானது பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள வடியும் குழாய்கள் வழியே வெளியேற வேண்டும். ஆனால் பக்கவாட்டு சுற்றில் 620 பிளஸ் என்ற இடத்தில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு பாலத்தின் மேலே பெய்யும் மழை நீர் அருவி போல் கொட்டுகிறது.

மேலும் அதே இடத்தில் மேல் புறத்தில் பாலத்தில் விரிசல்கள் காணப்படுகின்றது. கீழே உப்பனாற்றின் மேல் புறத்தில் பாலத்தில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில் பாலம் வலுவிழந்து உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்து பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையில் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

தொடரும் கன மழை 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அரிப்பு காரணமாக படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் அவதி