in

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணியின் போது திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர்

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை என்னும் பணியின் போது திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் உள்ளிட்ட நான்கு பேரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சிவஸ்தலமாகும் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் அறநிலையத்துறையால் அறிவிக்கப்பட்ட தேதியில் தன்னார்வ அமைப்புகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு எண்ணப்படுவது வழக்கம்

இந்நிலையில் இந்த மாதத்திற்கான பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோவில்பட்டியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு மூலம் என்னும் பணியை கோவில் நிர்வாகம் மேற்கொண்டது காணிக்கை என்னும் பணியின் போது திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அனைவரும் பார்க்கும் விதமாக வலைதளத்தில் நேரலையில் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதுஇந்நிலையில் உண்டியல் காணிக்கையை என்னும் பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி தென்பாக் காவல் நிலைய தலைமை காவலர் மகேஸ்வரி மற்றும் அவருடன் வந்த முத்துலட்சுமி மாரியம்மாள் அனிதா உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர் காணிக்கை என்னும் பணி துவங்கியது முதலே இவர்களின் செயல்களில் அங்கிருந்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழ துவங்கியது இவர்களை தீவிரமாக கண்காணிக்க துவங்கிய அதிகாரிகள் ஒரு கட்டத்தில் இவர்கள் காணிக்கை பணத்தை எடுத்து தங்களது ஆடைக்குள் மறைத்து வைப்பதை கண்டு பிடித்தனர் இதனை அடுத்து தலைமைக் காவலர் மகேஸ்வரி மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரையும் கோவில் நிர்வாகம் அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது தலைமைக் காவலர் மகேஸ்வரி காணிக்கை திருடியதை ஒப்புக்கொள்ளாமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துக் கொண்டிருந்தார் இதனால் அவர்கள் நான்கு பேரையும் திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவலர்கள் இருவரையும் வரவழைக்கப்பட்டுதிருக்கோவில் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் தொடர்ந்து நீண்ட நேரம் விசாரணையானது நடைபெற்று வந்தது

ஆனால் நீண்ட நேரமாகியும் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் தாமதப்படுத்தி கொண்டிருந்தனர் திருட்டில் ஈடுபட்டது தலைமை பெண் காவலர் என்பதால் அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என காவல்துறை உயரதிகாரிகள் முதல் அனைத்து காவலர்களும் ஈடுபட்டனர் இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் திருக்கோவிலின் நான்கு வாயில்களிலும் காத்திருந்தனர் இரவு நீண்ட நெடு நேரமாகியும் திருட்டில் ஈடுபட்டவர்களை கோவில் நிர்வாகமும் காவல்துறை வெளியில் அழைத்து வரவில்லை இந்த நிலையில் உள்ளே காத்திருந்த செய்தியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு செய்தியாளர்களின் கண்ணில் படாமல் மறைமுகமாக திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மகேஸ்வரி உள்ளிட்ட நான்கு பேரையும் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர் திருட்டில் ஈடுபட்டது காவல்துறையை சார்ந்த நபர் என்பதால் தலைமை காவலர் மகேஸ்வரியை பத்திரிக்கையாளர்கள் வீடியோவோ போட்டோவோ எடுத்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்திய காவல்துறையினர் கோவிலின் பின்புற வாசல் வழியாக ரகசியமாக அழைத்துச் சென்றனர் திருட்டில் ஈடுபட்டவர்களை மிகவும் ரகசியமாக பாதுகாப்பாக காவல்துறையினர் அழைத்துச் சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக முயன்ற போது அங்கு செய்தியாளர்களை கண்டதும் அனைத்து மகளிர் காவல் நிலைய கதவுகளை அவசர அவசரமாக பூட்டினர் பத்திரிக்கையாளர்கள் உள்ளே செல்லவிடாமல் பெண் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தினர்

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையைச் சார்ந்த பெண் தலைமை காவலர் என்பதால் அவரை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் மற்றும் மகளிர் காவல் துறையினரின் செயல் அனைவரிடத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இது போன்ற சம்பவங்கள் தென்காசி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடைபெறுவது மேலும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலே செயல்படுவது செய்தியாளர்கள் மத்தியில்ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

What do you think?

கார்த்திகை மாத சித்தரை நட்சத்திரத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு கூட்டு வழிபாடு

நெல்லை பாளையங்கோட்டை என இரு நகரங்களை இணைக்கும் ஆற்றுப்பாலம்.