in

வேதாரண்யம் பகுதியில் மழையால் ஒன்பதாயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

வேதாரண்யம் பகுதியில் மழையால் ஒன்பதாயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 5000 – க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல், கோடிக்கரை ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும், இரண்டு தனியார் நிறுவனங்கள் 6 ஆயிரம் ஏக்கரிலும் உப்பு உற்பத்தி செய்கின்றனர். உப்பு உற்பத்தியில் நேரடியாகவும். மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யம் பகுதியில் 6½ லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது
இந்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக உப்பள பகுதியான கோடிக்கரை, கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

உப்பள பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்கள் மற்றும் பனைமட்டைகளை கொண்டு மூடி பாதுகாத்து வருகிறார்கள்.

உப்பள பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள மழை நீர் மீண்டும் கடலுக்கு வழிந்து செல்வதற்கு பாதை வசதி பெரிதாக இல்லாத காரணத்தினால் மழைநீர் மீண்டும் கடலுக்குள் வந்து செல்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க ஒரு மாதகாலம் ஆகும் ஆகும்., அடிக்கடி மழை பெய்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது. இதன் காரமணாக உப்பு விலை உயர வாய்ப்பு உள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

What do you think?

நெல்லை பாளையங்கோட்டை என இரு நகரங்களை இணைக்கும் ஆற்றுப்பாலம்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சுப்ரபாத சேவையில் ஜோதிகா