in

காவிரி ஆற்றின் கடைசி கதவணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறப்பு

காவிரி ஆற்றின் கடைசி கதவணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறப்பு, கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் மற்றும் வயல்வெளிகளில் சூழ்ந்த தண்ணீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் வடிந்து வருகிறது. இதனால் ஆறுகளின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. காவிரி டெல்டாவின் ஜீவாதாரமான காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வானகிரி இடையே கடலில் கலக்கிறது. கடலில் கலப்பதற்கு முன்பு மேலையூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் கடைசி கதவு அணை உள்ளது. தற்பொழுது அதிகப்படியான வெள்ளம் காரணமாக கதவணையின் அனைத்து மதங்களும் தூக்கப்பட்டு வடிந்து வரும் வெள்ள நீர் அப்படியே கடலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வினாடிக்கு 750 கன அடி வெள்ள நீர் கடலுக்குள் சென்று வரும் நிலையில், கடல் சீற்றம் காரணமாக வெள்ளம் தாமதமாக வடிகிறது. மேலும் மழை தொடர்ந்தால் ஆறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து பெரும் சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முகத்துவாரத்தில் தண்ணீர் வடியும் பணியினை, வெள்ளம் தொடர்பான கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் மயிலாடுதுறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

What do you think?

மயிலாடுதுறை அருகே குளிச்சாரு கிராமத்தில் நேற்று பெய்த மழையில் சுமார் 100 ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கியது

நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு