நாகையில் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் அலைகள் சுமார் 3 அடி உயரத்திற்கு சீற்றத்துடன் காணப்படுகிறது
நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதை தொடர்ந்துநேற்று காலை முதல் கனமழையானது பெய்து வருகிறது.மேலும் புயல் சின்னம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இதனால் நாகை கீச்சாங்குப்பம் அக்கரைப்பேட்டை செருதூர் வேளாங்கண்ணி வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் மீன்வளத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக 700 விசைப்படகுகள் 3500 பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் நாகையிலிருந்து திருவள்ளூர் வரை வழக்கத்தைவிட மாறாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவித்திருந்த நிலையில் நாகையில் மூன்ற அடியில் இருந்து குமார் 5 அடி வரை கடலில் அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்படுகிறது