பூம்புகார் வானகிரி தரங்கம்பாடி பகுதிகளில் தொடரும் கடல் அலை சீற்றம்
பூம்புகார் வானகிரி தரங்கம்பாடி பகுதிகளில் தொடரும் கடல் அலை சீற்றம், கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரிப்பு, மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றம் காணப்பட்டு வருகிறது பூம்புகார் வானகிரி தரங்கம்பாடி சந்திரபாடி மாணிக்கபங்கு, சின்னூர்பேட்டை சின்னங்குடி, திருமுல்லைவாசல் பழையார் என்று 28 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன.
மீன்வளத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. கடற்கரை பகுதிகளில் நேற்றை விட இன்று கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் வேகமாக கரையை வந்து மோதுகின்றது.
இதன் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான பகுதிகளில் வைத்துள்ளனர். பூம்புகார் மற்றும் வானகிரி உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது தூரல் சாரல் மழையாக பெய்து வருகிறது.