in

மழை நீர் தேங்கியதால் 200 ஏக்கரில் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின

மழை நீர் தேங்கியதால் 200 ஏக்கரில் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின

 

மணல்மேடு அருகே ராதாநல்லூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கியதால் 200 ஏக்கரில் சம்பா இளம் பயிர்கள் நீரில் மூழ்கின.

வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று அதற்கு முந்தினமும் பெய்த மழை காரணமாக வயல்வெளிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மணல்மேடு அருகே ராதா நல்லூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் சுமார் 200 ஏக்கரில் இளம் சம்பா பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வடிகால் வாய்க்கால் சீரமைக்காத காரணத்தால் தண்ணீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக பயிர்கள் அழுகி கரைந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. ஏக்கருக்கு 15,000 வரை செலவு செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

உடனடியாக தண்ணீரை வடிய வைத்து பயிரைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

பூம்புகார் வானகிரி தரங்கம்பாடி பகுதிகளில் தொடரும் கடல் அலை சீற்றம்

கல்லூரி மாணவியை கிராமத்திற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார்