மழையால் வெளியேறும் உபரிநீரினால் செட்டிபட்டு படுகையனை நிரம்பி வழிகிறது
புதுச்சேரி கிராமப்புறங்களில் மழையால் வெளியேறும் உபரிநீரினால் செட்டிபட்டு படுகையனை நிரம்பி வழிகிறது. இதில் அந்த பகுதி இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்து மகிழ்ந்தனர்.
ஃபெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் நகரப் பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்தது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிராமப்புறங்களில் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரால் செட்டிபட்டடு படுகை அணை நிரம்பி வழிகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்தும் ஆனந்த குளியல் போட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.