திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் பெரிய சேஷ வாகன புறப்பாடு
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம்.
இரண்டாம் நாள். காலை பெரிய சேஷ வாகன புறப்பாடு.
பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை தாயாரின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோட்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் வாகன புறப்பாடாக நேற்று இரவு தாயாரின் சின்னசேஷ வாகன புறப்பாடு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலை தாயாரின் பெரிய சேஷவாகன புறப்பாடு திருவீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து தாயாரை வழிபட்டனர்.