நாமக்கல் பரமத்தி வேலூரில் எல்லையம்மன் ஆலயத்தில் பிரதோஷச விழா
நாமக்கல் மாவட்டம் – பரமத்திவேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு 28.11.24 கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கனி வர்க்கங்கள், திருமஞ்சனம், மஞ்சள், இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை சாறு, சொர்ண அபிஷேகம், சந்தனம், பன்னீர் போன்ற பல வாசனை திரவியங்கள் ஆன 21 திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு.
ஏகாம்பரநாதர் சிறப்பு அலங்காரத்துடன் உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து விசிறி, சாமரம், வேல், கண்ணாடி போன்ற சோடஷ உபசாரத்துடன் அடுகாரத்தி, பஞ்சாரத்தி, ஏகாரத்தி, கும்பாரத்தி, கலச ஆரத்தி உடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.