திருமணத்திற்கு முன்பு ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினருடன் சுவாமி த ரிசனம் செய்தார்.
அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் பி.பி. ஜான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் எனது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் ஏழுமலையான வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து கோயில் முன்பு இருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது பக்தர் ஒருவர் வழங்கிய பெருமாள் போட்டோவை பெற்று கொண்டார்.