in

என்னமா யோசிக்கிறாங்கப்பா..!

என்னமா யோசிக்கிறாங்கப்பா..!

நாகையில் குடைகொண்டு மீன்களை பிடித்த இளைஞர்கள்; கனமழையால் சீறிப்பாய்ந்து ஓடும் அரசலாற்று வெள்ள நீரில் குடையால் இளைஞர்கள் மீன்பிடித்து மகிழ்ந்த வரும் வீடியோ வைரல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் நாகை மாவட்டம் அம்பல் கிராமத்தில் உள்ள அரசலாற்றில் மழை வெள்ளநீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது.

அம்பல் பகுதியில் உள்ள கதவணையில் சீரி பாய்ந்து ஓடும் நேரில் குடை கொண்டு இளைஞர்கள் மீன்களைப் பிடித்து வருகின்றனர். தூண்டில் வலை எதுவும் பயன்படுத்தாமல் குடையின் நான்கு முனைகளிலும் கயிறை கட்டி ஓடும் நீரில் இறக்கி கெண்டை மீன் குஞ்சுகளை லாவகமாக இளைஞர்கள் பிடித்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த பாலா என்ற இளைஞர் குடையால் மீன் குஞ்சுகளை பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What do you think?

திருமணத்திற்கு முன்பு ஏழுமலையானை வேண்டிக் கொண்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ்

ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம்