ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டிற்குரிய வாடகை கட்டிடங்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருவதால் பொதுமக்கள் அவதி..
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர, ராஜபாளையம் அருப்புக்கோட்டை சிவகாசி சாத்தூர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நகர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 25 ஆம் தேதி அன்று நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் நடத்திய ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் வணிக பயன்பாட்டிற்குரிய வாடகை கட்டிடங்களுக்கு 18% R CM /FCM முறையில் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இன்று மாவட்டத்தில் பல்வேறுபகுதியில் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தினால் மளிகை கடைகள், காய்கறி கடைகள், அரிசி கடைகள், தேனீர் கடைகள், பழக்கடைகள், விவசாயத்திற்கு பயன்படுத்தும் உரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வெளியூர்களில் இருந்து தங்கி வேலை செய்யும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு உணவகங்கள் முழுவதும் மூடப்பட்டதால் சிரமம் அடைந்தனர்.
மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடிப்பதை கைவிட வேண்டும் வணிகர்களுக்கு வாடகை கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.