in

புதுச்சேரியில் மேகமூட்டமுடன் காணப்படும் ரம்மியமான சூழல்

புதுச்சேரியில் மேகமூட்டமுடன் காணப்படும் ரம்மியமான சூழல்

 

ஆயிரம் கணக்கான சிட்டுக்குருவிகள், மற்றும் மயில்கள் இறைத்தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுக்கும் கண்கொள்ளா காட்சி…

புதுச்சேரி கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது அறுவடை செய்யும் நிலையில் உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு பெய்து வந்த மிதமான மழையால் நெற்பயிரிகள் நீரில் மூழ்கி வீணாகிவிடும் நிலை ஏற்பட்டது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் வானம் மேகம் மூட்டமுடன் ரம்மியமான காட்சியுடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கிராமப்புறங்களில் ஆயிரம் கணக்கான சிட்டு குருவிகள் மற்றும் மயில்கள் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு இறைத்தேடி கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகிறது. மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள நெல்மணிகள் மீது ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகள் அமர்ந்து நெல்மணிகளை தின்று வருகிறது.

மேலும் மயில்களும் விவசாய நிலங்களுக்கு படை எடுத்து அறுவடைக்க தயாராக உள்ள நெல்மணிகளை தின்று வருகிறது. இதனால் மழையிலிருந்து தப்பித்த விவசாயிகளுக்கு பறவைகளிமிருந்து தப்பிப்பது எப்படி என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

What do you think?

மண்டபங்களில் எச்சி இலை எடுத்தேன்…விஜய் டிவி புகழ் Real Story

புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லக்கூடிய சாலை மூடல்…